Untitled Document
Warning: preg_match() [function.preg-match]: Unknown modifier 'n' in /home/theepori/public_html/header.php on line 42
Untitled Document
கரூர் மாவட்டத்தில் ராயனூர்,​​ இரும்பூதிப்பட்டியில் இலங்கைத் தமிழ் பெண் தீக்குளிப்பு -​ வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!
March 09,2010
  இலங்கை அகதி முகாம் பெண் தீக்குளித்தது தொடர்பாக நியாயம் கேட்டு,​​ கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை அகதிகள் முகாம் பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

   ​ ​ கரூர் மாவட்டத்தில் ராயனூர்,​​ இரும்பூதிப்பட்டியில் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம் செயல்படுகிறது.​ இதில்,​​ ராயனூர் முகாமில் சுமார் ஆயிரத்து 700 பேர் வசித்து வருகின்றனர்.​

   கடந்த 2007-ல் காந்திகிராமத்தில் 2 குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகளை போலீஸôர் அண்மையில் கைது செய்தனர்.​ இவர்களில் 2 பேர் ராயனூர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள்.

   ​ ​ தேடப்படும் மற்றொரு குற்றவாளியும் இந்த முகாமைச் சேர்ந்தவராம்.​ எனவே,​​ போலீஸôரின் பார்வை முகாமின்மீது விழுந்தது.​ முகாமிலுள்ளோரிடம் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.​ இதற்கு,​​ குற்றவாளிகளைத் தேடுவதாகக் கூறி,​​ அப்பாவிகளைச் சித்திரவதை செய்யக் கூடாது என்று முகாமிலுள்ளோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

   ​ ​ இந்நிலையில்,​​ குழந்தைகள் கொலை வழக்கில் தொடர்புடைய குமார் என்ற தற்கொலை குமாரை ​(36) போலீஸôர் பிடிக்க முற்படும்போது,​​ பாலத்திலிருந்து தவறி விழந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு,​​ கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

   ​ ​ இந்நிலையில்,​​ குமாரைப் பார்க்க வேண்டுமென அவரது மனைவி பத்மாவதி என்ற தேவி ​(26) கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.​

   எனவே,​​ மார்ச் 7-ல் தேவியை போலீஸôர் பசுபதிபாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.​ காவல் நிலையத்திலிருந்து திரும்பிவந்த தேவி,​​ தனது வீட்டிற்குள் சென்று தீக்குளித்தார்.​ இதில்,​​ பலத்த காயமடைந்து,​​ கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

   ​ ​ "தேவியின் தற்கொலை முயற்சிக்கு போலீஸôர்தான் காரணம்;​ தேவியிடம் தவறாக நடக்க அவர்கள் முயற்சித்தனர்.​ மேலும்,​​ அவரிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டதோடு,​​ புகைப்படமும் எடுத்துள்ளனர்.​ தனது கணவர் குமாரைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை.​ எனவே,​​ சம்பந்தப்பட்ட போலீஸôர் மீது நடவடிக்கை ​ எடுக்க வேண்டும்' எனக் கோரி முகாம் மக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

   ​ ​ அப்போது போலீஸ் தடியடி,​​ கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.​ தொடர்ந்து,​​ அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

   ​ ​ இந்நிலையில்,​​ கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மாலை வந்த சில பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   ​ ​ தேவியை தீக்குளிக்கத் தூண்டியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.​

   இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் ஞான.​ சிவக்குமார்,​​ ஆய்வாளர் பூ.​ முத்துக்கருப்பன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.​ இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

   courtesy:dinamani

Back