Untitled Document
Warning: preg_match() [function.preg-match]: Unknown modifier 'n' in /home/theepori/public_html/header.php on line 42
Untitled Document
தமிழகத்தில் புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு முகாம்களை விட்டு வெளியில் செல்ல இலங்கை அகதிகளுக்கு தடை!
March 09,2010
  தமிழக அரசாங்கத்தின் புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழா சென்னையில் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் தமிழகத்தில் உள்ள முகாம்களை விட்டு வெளியில் செல்ல இலங்கை அகதிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

   இந்த திறப்பு விழாவில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

   தலைவர்கள் வருகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்ட பகுதியில் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

   அத்துடன் மண்டபம் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

   courtesy:gtn

Back