நேற்று கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இருக்கும் கிணறு ஒன்றில் இரண்டு பெண்களது உடல்கள் மிதப்பதைக் கண்ட சிலர் பொலிசுக்குத் தகவல் கொடுத்தனர்.
நிகழ்விடத்துக்கு வந்த பொலிசார் பிற மக்களின் உதவியுடன் அந்த உடல்களை மீட்டனர். அப்பெண்கள் கூறிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்த உடல்கள் அழுகியிருக்கும் நிலையில் பார்க்கும் போது நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன்னர் இவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இவ்விரு பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்களா? ஏன்பது தெரியவில்லை. அவர்களது பெயர் விபரங்களும் தெரியவில்லை.
இவர்களுக்கு ஏறக்குறைய 30 வயது இருக்கும் என்று நேரில் கண்டவர்கள் கூறினர். மர்மமான முறையில் கொல்லப்படுவது யாழ்ப்பாணம் முதற் கொண்டு வவுனியா வரை தினமும் நடைபெற்று வரும் நிகழ்வாக உள்ளது.
வவுனியா மாவட்டத்தில் இராணுவம் அமைத்திருக்கும் முகாம்களில் மூன்று முகாம்களுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. இந்த முகாம்களில் இருக்கும் தமிழர்கள் தினமும் கொல்லப்பட்டு பல இடங்களிலும் புதைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
வெளியுலகப்பார்வைக்கு என்று சில முகாம்களைத் திறந்துவைத்துள்ள ஆட்சியாளர்கள், திறக்கப்படாத சில முகாம்களில் எங்கள் மக்கள் வதைக்கப்படுகின்றனர் நாசிகளின் கைகளில் மாட்டிய யூதர்கள் போல!