கிழக்கு மாகாணத்தின் கல்விசார் அலுவலகங்களில் சிங்கள மக்கள் - கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம்!
February 08,2010
கிழக்கு மாகாணத்தின் கல்விசார் நிர்வாக அலுவலகங்களில் சிங்கள மக்களை புகுத்தும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் கல்விப்பணிப்பாளர் மற்றும் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரை சிறீலங்கா அரசு இடம்மாற்றம் செய்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் ஆழுனராக ஓய்வு பெற்ற சிறீலங்காப்படை அதிகாரியே இருக்கின்றார். இந்நிலையில் கல்விசார் நிர்வாக அலகுகளில் 90 வீதம் சிங்களமயமாக்கப்பட்டு அங்கு பணிபுரியும் தமிழர்களின் கலாச்சாரம் மாற்றப்பட்ட நிலையில் தனிச்சிங்களத்தினை புகுத்தும் நடவடிக்கையாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தண்டாயுதபாணி அவர்கள் மற்றும் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர்களை சிறீலங்கா அரசு இடம்மாற்றியுள்ளது.
சிறீலங்கா அரசின் இவ்வாறான செயற்பாட்டினால் தமிழ் கல்விச் சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.