Untitled Document
Warning: preg_match() [function.preg-match]: Unknown modifier 'n' in /home/theepori/public_html/header.php on line 42
Untitled Document
கிளிநொச்சியில் சிறீலங்காப்படையினரால் இரண்டு தமிழ் பெண்கள் படுகொலை!
February 08,2010
  சிறீலங்கா அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன.

   இந்நிலையில் மீண்டும் வன்னியில் குடியேறி வரும் மக்களை வரவேண்டாம் என்று, அங்கு குடியமர்ந்து சிங்களபடையினரின் கொடுமைகளை அனுபவிக்கும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

   இன்று, கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் இரண்டு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பபட்டுள்ளார்கள்.

   இவர்களது உடலங்களை மக்கள் இனம்காட்டியுள்ளதுடன், உடலங்களை சிறீலங்கா காவல்துறையினர் எடுத்துசென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   இளம் பெண்கள் இருவர் படுகொலை செய்யபட்டு கிணற்றில் வீசப்பட்டதை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் படுகொலை செய்யபட்ட பெண்கள் யார் என இனம்காணமுடியாது உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

   குறிப்பாக, வன்னி அகதிமுகாம்களில் தங்கியிருப்போருக்கு பதிவுகள் உள்ளன. இவ்வாறு பதியப்படாமல் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களும், இறுதியுத்தத்தின் போது, பதட்டம் மற்றும் பயத்தின் காரணமாக காடுகளுக்குச் சென்று பின்னர் வவுனியாவில் மக்களோடு கலந்தவர்களை கைது செய்தும் பதிவு செய்யப்படாமல் இரகசியமான ஒரு முகாமில் இராணுவத்தினர் வைத்துள்ளதாகவும் வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   இவ்வாறான முகாமில் பதிவு செய்யப்படாத இளம் பெண்களை இராணுவத்தினர் கொடுமைகள் செய்து, கொலை செய்து கிணற்றில் வீசி வருவதாகவும் வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Back