யாழ். குடாநாட்டில் காணாமற்போன 50 பேர் வரணி படைத்தளத்தில் வைத்து சித்திரவதை - யாழ் மனித உரிமை செயலகத்தில் பொதுமக்கள் முறைப்பாடு
December 12,2008
யாழ். குடாநாட்டில் காணாமற்போன ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வரணி படைத்தளத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுவருவதாக யாழ் மனித உரிமை செயலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மனிதஉரிமை செயலக அதிகாரி எஸ்.சிவராஜலிங்கம் தெரிவிக்கையில்,
தென்மராட்சி வரணிப் படைத்தளத்தில் குடாநாட்டில் காணமற்போனவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக் குட்படுத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் முறைப்பாடு செய்துவருகின்றனர்.
இதனையடுத்து நாம் இவ்விடயம் குறித்து யாழ் .குடா படைத்தளபதி டி.ஏ.சந்திரசிறியிடம் அப்படைமுகாமைப் பார்வையிட அனுமதி கோரியபோதும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர்மேலும் தெரிவித்தார்.