1980ஆம் ஆண்டு செப்ரம்பர் 18ம் திகதி உமா மகேஸ்வரன் அவர்கள் மாதகல் வழியாக தெல்லிப்பழை வந்தார். அங்கிருந்து 20ம் திகதி தாவடியில் இருக்கும் ராஜன் அவர்களின் மாமனார் வீட்டில் வந்து தங்கினார். அப்போதுதான், திரு. சுந்தரம் அவர்கள், திரு. சந்ததியார் அவர்கள் என்று அனைவரும் உமா அவர்களைச் சந்தித்தனர்.
இயக்கத்துக்குப் பெயர் சூட்டுவதும், அதற்கான முதற் கூட்டத்தையும் கூட்டுவதற்கு ராஜன் அவர்கள் ஏற்பாடு செய்தார்.
அதன்படி செப்ரம்பர் 27ந்திகதி சங்கானை தொண்டர் கந்தசாமி அவர்களின் வீட்டில் முதலாவது கூட்டம் நடைபெற்றது. திரு. கந்தசாமி அவர்களின் மகன் கண்ணன் (சங்கானைக் கண்ணன்) ராஜன் அவர்களின் நெருங்கிய நண்பர். பாதுகாப்புக் கருதி சங்கானையைத் தெரிவு செய்து முதற் கூட்டம் ஏற்பாடாகியது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், திரு. சந்ததியார் அவர்கள், திரு. சுந்தரம் அவர்கள், திரு. பாபுஜி அவர்கள், திரு. நிறஞ்சன் அவர்கள், திரு. மாணிக்கம் தாசன் அவர்கள், திரு. க. கண்ணன் அவர்கள், திரு. காத்தான் அவர்கள் ஆகியோர்.
மாணிக்கம் தாசன் அவர்களையும், பாபுஜி அவர்களையும் உமா மகேஸ்வரன் அவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் ராஜன் அவர்கள்தான் அறிமுகம் செய்து வைத்தார். திரு. மாணிக்கம் தாசன் அவர்கள் 1976ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விஸ்வமடுவில் இருந்த ராஜன் அவர்களின் பயிற்சி முகாமில் இணைந்தவர்.
உயர் திரு. சிறிசபாரெத்தினம் அவர்கள், உயர்திரு. சந்ததியார் அவர்கள் மற்றும் உயர்திரு. ராஜன் அவர்கள் ஆகியோர் சேர்ந்து விஸ்வமடு படித்த வாலிபர் திட்டத்தில் வழங்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்த வாலிபர் மத்தியில் முகாம் அமைத்து பயிற்சி வழங்கி வந்தனர்.
இதை அறிந்த மாணிக்கம் தாசன் அவர்கள் வீட்டிற்குத் தெரியாமல் விஸ்வமடுவுக்கு ஓடிவந்து விட்டார். இரண்டு வாரங்களில் மாணிக்கம் தாசன் அவர்களின் நண்பரான அன்ரன் என்பவர் மாணிக்கம் தாசன் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து தாசன் அவர்களின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டார்.
மாணிக்கம் தாசன் அவர்களின் பெற்றோர், தாசன் அவர்களைத் தேடி பரந்தனுக்கு வந்து, ராஜன் அவர்களின் வீட்டில் தங்கி விட்டனர். எப்படியாவது மகனை மீட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்று அழுது புலம்பத் தொடங்கி விட்டனர்.
இதனால், விஸ்வமடுவில் இருந்த தாசன் அவர்கள் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டார். இதன் பின்னர் தாசன் அவர்கள் இயக்க நடவடிக்கைகளில் கலந்து கொண்டது 27–09-1980 அன்று சங்கானையில் நடந்த முதற் கூட்டத்தில்தான்.
1978, 1979 ஆகிய ஆண்டுகளில் வவுனியாவில் ஏற்படுத்திய மலையக மக்களின் குடியேற்றங்களுக்கு மாணிக்கம் தாசன் அவர்கள் அடிக்கடி வந்து செல்வார். சில வேலைகளுக்கும் அவர் பயன்படுத்தப்பட்டார். முழு நேரமாக அவர் இணைந்தது 1980ல்தான். இத்துடன் இவற்றை நிறுத்திக் கொள்கிறோம்.
இப்போது கிளிநொச்சி வங்கியைக் கொள்ளையடிக்க கூலிக்கு சாரதியாகச் செயற்பட்டார் ராஜன் என்று கோவணக் குமாரதுரை அவர்கள் குறிப்பிட்டதற்கு பதில் தருகிறோம்.
புளொட் இயக்கத்தில் எந்தவித பணமும் இருந்ததில்லை. உமா அவர்களின் செலவு உட்பட செயற்பாடுகளுக்கு ராஜன் அவர்கள் பல இடங்களில் கடன் வாங்கிக் கொடுத்தார். இறுதியில் இனியும் முடியாது என்று தெரிந்ததும், ஏதாவது ஓர் வங்கியைக் கொள்ளை அடிக்க வேண்டும். கடன் வாங்கி இயக்கம் நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்து கிளிநொச்சி வங்கியை தெரிவு செய்தனர் உமா அவர்களும் ராஜன் அவர்களும்.
வங்கிக் கொள்ளை அடிப்பதற்கும் காசு தேவை. மோட்டார் சைக்கிள், வாகனம், உணவுத் தேவைகள், மற்றும் போக்கு வரத்து அனைத்துக்கும் காசு தேவை. யாரிடத்திலும் காசு கிடையாது. எப்படியாவது நீங்கள் காசு ஏற்பாடு செய்யுங்கள். வங்கிக் கொள்ளை முடிந்ததும் அந்தப் பணத்தில் கடணைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று ராஜன் அவர்களிடத்து உறுதி கூறினார் உமா அவர்கள்!
ராஜன் அவர்கள் தனக்கு வேண்டிய நண்பர் ஒருவரிடத்திலிருந்து ரூபா 40,000 (நாற்பதினாயிரம்) கடன் வாங்கினார். அவர் யாழ்ப்பாணம் கூட்டுறவு விற்பனை நிலையத்தில் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெறும் போது கிடைத்த ஓய்வூதியப்பணத்திலிருந்துதான் இந்த நாற்பதினாயிரத்தைக் கொடுத்தார். இப்படி தனது ஓய்வூதியப் பணத்தைக் கொடுத்தவரது பெயர் உயர்திரு. பத்மநாதன் அவர்கள். யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர்.
வங்கிக் கொள்ளை நடந்த ஒரு மாதத்தல் ராஜன் அவர்கள் கைது செய்யப்பட்டார். பனாகொடை முகாமிலிருந்து உமா மகேஸ்வரன் அவர்களுக்கு, ராஜன் அவர்கள் ஒரு தகவல் கொடுத்தார். அதாவது, உயர்திரு. பத்மநாதன் அவர்களிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடும்படி. ஆனால், உமா மகேஸ்வரன் அவர்கள் தான் இறக்கும் வரை அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
1981ம் ஆண்டு புளொட் இயக்கம் வாங்கிய பணத்தை 1988ஆம் ஆண்டு ராஜன் அவர்கள் திரு;பபிக் கொடுத்தார்.
1985ஆம் ஆண்டு பணம் கொடுத்த பத்மநாதன் அவர்களது மகன் சென்னை எம்.எல்.ஏ. ஹொஸ்ரலில் இருந்த புளொட் அலுவலகத்துக்கு வந்துள்ளார். ராஜன் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டதற்கு, அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்று சொல்லியுள்ளனர். (அப்போது ராஜன் அவர்கள் லெபானில் இருந்தார்.)
பின்னர் தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்தற்கு, விவரங்களை விசாரித்துள்ளனர். விபரம் சொல்லப்பட்டதும் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் உமா அவர்கள் சென்னையில் இல்லை என்று அவருக்கு சொல்லப்பட்டுள்ளது. பத்மநாதன் அவர்களின் மகன் திரும்பிச் சென்றுவிட்டார். சந்தித்தால் இலங்கைப் பணம் நாற்பதினாயிரம் கொடுக்க வேண்டி வரும் என்று சந்திப்பதைத் தவிர்த்துள்ளார் உமாமகேஸ்வரன் அவர்கள்.
புளொட் இயக்கத்தின் வரலாற்றில் இவை அனைத்தும் மறைக்கப்பட்டவை. இன்னும் பல உண்டு வரவிருக்கும் புத்தகத்தில் இவைப்பற்றிக் காணலாம்.
அடுத்து, திரு. பாரூக் அவர்களிடம் (திரு. கணேசலிங்கம்) கூலி வாங்கப் போகும் போதுதான் ராஜன் அவர்கள் சுடப்பட்டார் என்று தகவல் சொல்லியுள்ளனர் கோவனக் கோஸ்டியினர்.
திரு. கணேசலிங்கம் (பாரூக்) அவர்கள் 1981ஆம் ஆண்டு பல தடவைகளில் வவுனியா பாலமோட்டைப் பண்ணைக்கு வந்த ராஜன் அவர்களை சந்தித்துள்ளார். இயக்கத்தில் சேருவதற்கென்று பல மாதங்கள் அலைந்தார். அவரது உடல் தோற்றம் கடுமையான பயிற்சிகளுக்கு தாங்காது என்று நினைத்து வரை இணைத்துக் கொள்ளும் நாள் தள்ளிப் போய் கொண்டிருந்தது.
இறுதியில், கிளிநொச்சி வங்கிக்கொள்ளைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர்தான் இயக்கத்தில் சேர்க்கப்பட்டார். நவ்வி என்ற ஊரைத் தாண்டி அமைக்கப்பட்டிருந்த முகாமில்தான் உமாமகேஸ்வரன் அவர்களிடம் ராஜன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு செயற்பட ஆரம்பித்தார்.
திரு. பாரூக் அவர்களிடம் கூலி வாங்கும் அளவுக்கு பாரூக் அவர்கள் பணக்காரருமல்ல, இயக்கத்தில் சீனியர் உறுப்பினரும் அல்ல.
திரு. உமாமகேஸ்வரன் அவர்கள் உள்பட அன்று புளொட் இயக்கத்திலிருந்த அனைவருமே ராஜன் அவர்களது உதவியைத்தான் எதிர்பார்த்திருந்தனர். கிளிநொச்சி, வவுனியாவில் புளொட் இயக்கத்தின் விபரங்களை பின்நாளில் காணலாம்.
உயர்திரு. சந்ததியார் அவர்களைக் கடத்திக் கொலை செய்ய பிரம்பலூர் ராதா என்ற பெண்ணை உமாமகேஸ்வரன் அவர்களும் அவரது இன்ரலிஜனும் எப்படிப் பயன்படுத்தினர் என்ற விவரம் வரும் நாளில் காணலாம்.
இந்தப் பெண் தூள் வியாபாரம் செய்ததும், புளொட் தலைமையுடன் சேர்ந்து செயற்பட்டதும் புளொட் குழுவால் நன்கு அறியப்பட்டது. ராஜன் அவர்கள் இந்தப் பெண்ணைச் சந்தித்தது கூட கிடையாது. ஆனால் கோவணக் கூட்டம் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து ராஜன் அவர்கள் தூள்வியாபாரம் செய்தார் என்று தொப்பியைப் புரட்டிப் போடுகின்றனர்.
உண்மையில், இந்தப் பேர்வழிகளை எந்தக் காலத்திலுமே மன்னிக்கக்கூடாது. இப்படி ஓர் கட்டுக்கதையை வெளியிட கோவணதுரை அவர்கள் தனது பழைய புளொட் சகாக்களுடன் இணைந்து தத்துவ வரலாற்று மேதையாகியுள்ளனர்.
புளொட் என்ற சொல்லுக்கு ஏற்ப சதியில் ஈடுபடுவதுதான் இவர்களது வேலையாக இருக்கிறது. அன்று உமாமகேஸ்வரன் அவர்கள் இலங்கை அரசிடம் முறையிட்டு தனது பிரச்சினைக்குத் தீர்வு காணப் புறப்பட்டார். இன்று உள்ள புளொட்டும் இலங்கை அரசிடமே தீர்வை எதிர்பார்த்து சிங்களவர்களின் தயவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மிருகங்கள் எங்கள் இனத்துக்கு கதை சொல்ல குரைக்கின்றன. இணைய தளம் என்ற ஊடகம் இவர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது. ஒட்டுமொத்தக் குடும்பமாகப் பாய்ந்தோடி டென்மார்க்கில் வாழ்வைத் தேடிய கோவணக் குமாரதுரை அவர்கள், சிறை உடைப்பில் ராஜன் அவர்கள் முந்திக் கொண்டு ஓடியதால்தான் கால் உடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கெல்லாம் நாகரீகம் பார்த்து எழுதக்கூடாது.
மேலே சொல்லப்பட்ட செய்திகளில் ஒருவீதம் கூட கூட்டிக் குறைத்துச் சொல்லப்படவில்லை. வரலாற்றுத் தொகுப்பிலிருந்து இவை சேகரிக்கப்பட்டவை. மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் உயர்திரு. சத்தியசீலன் அவர்கள் இப்போதும் லண்டன் மாநகரில் வசித்து வருகிறார். விவரம் தேவைப்படுபவர்கள் அவரைச் சந்தித்து அன்றைய செயற்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
நன்றி!
thanks sarkunam
|