Untitled Document
Warning: preg_match() [function.preg-match]: Unknown modifier 'n' in /home/theepori/public_html/header.php on line 42
Untitled Document
யார் இந்த பரந்தன் ராஜன்? நிதர்சனம்.நெற் இணையத்தின் அவதூறு செய்திக்கான பதில்!
September 11,2008
  நிதர்சனம்.நெற் பெயரில் சிங்கள அரசுக் கைக்கூலி இணையதளம் ஒன்று டென்மார்க்கில் செயற்பட்டு வருவதை பலரும் அறிவர்.

   அந்த இணையத்தில் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் பற்றி அவதூறு ஆராச்சிக் கட்டுரை ஒன்றை 06-09-2008 அன்று வெளியிட்டிருந்தது.

   இந்தக் கட்டுரைப் பற்றியும் இந்த நபர்கள் சார்ந்த புளொட் பற்றிய சரியான தகவல்களையும் குறு விளக்கமாகத் தருகிறோம்.

   இதனை நாம் மறுத்துரைக்காது விட்டால் வருங்காலத்தவர் தவறான எண்ணங்களைக் கொண்டவர்களாக உருவாக வாய்ப்புண்டு.

   எனவே, சரியான தகவல்களைத் தெரியப்படுத்த எம்மைத் தூண்டிய இந்த நபர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

   ஈழ விடுதலைப் போராட்டமானது சிதைந்து போவதற்கு பல இயக்கங்களும் காரணமாக இருந்தன. இதல் முக்கிய பங்கு வகித்தது புளொட் இயக்கமாகும்.

   விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1000 பேர் இருக்கும் போது புளொட் இயக்கத்தில் பன்னிரெண்டாயிரம் பேர் இருந்தனர். அனைத்தையும் சீரழித்து குட்டிச்சுவராக்கியது அதன் தலைவர் உமா மகேஸ்வரனையும் அவரது உளவுத்துறை என்ற சுழிபுரம் நபர்களையும் சாரும்.

   மேற்கண்ட கட்டுரையில் ஈ.என்.டி.எல்.எப். தலைவர்பற்றி எழுதியவர்கள் வரலாறுகளை திரிவுபடுத்தும் கறுப்பு ஆடுகள் என்பதில் சந்தேகம் இல்லை. இராவணன் என்ற பெயரில் இதனை எழுதியிருப்பவர்களுடன் இரண்டு புளொட் அங்கத்தினரும் அடங்கும்.

   இந்தக் கட்டுரையை எழுதியவர்கள் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பதற்கு ஆதாரம் அந்தக் கட்டுரையில் இருக்கிறது.

   கிளிநொச்சி வங்கிக் கொள்ளையை “கிளிநொச்சி வங்கிப் பணம் பறிமுதல்” என்று குறிப்பிட்டுள்ளனர். “கொள்ளை” கொள்ளைதான். பறிமுதல் என்ற விளக்கம் மக்களை ஏமாற்றும் புளொட் சதிகாரரின் முயற்சியாகும்.

   எனவே, இந்தக் கட்டுரைப் பற்றியும் இந்த நபர்கள் சார்ந்த புளொட் பற்றிய சரியான தகவல்களையும் குறு விளக்கமாகத் தருகிறோம்.

   இதனை நாம் மறுத்துரைக்காது விட்டால் வருங்காலத்தவர் தவறான எண்ணங்களைக் கொண்டவர்களாக உருவாக வாய்ப்புண்டு.

   எனவே, சரியான தகவல்களைத் தெரியப்படுத்த எம்மைத் தூண்டிய இந்த நபர்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

   கட்டுக்கதைத் தொகுப்புக்கு பதில்கள் இதோ!

   (01) யார் இந்தப் பரந்தன் ராஜன்? உழைப்புக்காக பரந்தனில் குடியேறியவர். காட்டில் மரங்களை வெட்டுவது இவரது தொழிலாகும்.

   புதில்:- ராஜன் அவர்களின் தந்தையார் அரசாங்க நெற் கழஞ்சியத்தில் (Government paddy stores) மனேஜராகப் பணியாற்றியவர்.

   1958ஆம் ஆண்டு இனக்கலவரம் நடந்தபோது யாழ். நெற்கழஞ்சியத்தில் பணியாற்றிய இவரது தந்தையார், பணியாளர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச் சாட்டில் மன்னார் மாவட்டம் முருங்கனில் இருக்கும் G.P.S. க்கு மாற்றப்பட்டார்.

   1961ஆம் ஆண்டு சிறிமா சிங்களத்தை ஆட்சி மொழியாக்கியதை எதிர்த்து தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகங்களை நடத்தியது. மன்னாரில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் பரந்தனில் இருக்கும் G.P.S. க்கு 1962ல் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

   1963ஆம் ஆண்டு பரந்தனில் நகர சபைத் தேர்தல் நடந்தது. அதற்கு முன்னர் நடந்த தேர்தலில் தமிழ் காங்கிரஸ் கட்சியில் சுப்பிரமணியம் என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.

   காங்கிரசை எதிர்க்க அங்கு அப்போது யாரும் இல்லை. (திரு. சுப்பிரமணியம் அவர்கள் எழுத்தாளர் தாமரை அவர்களின் தந்தையாவார்.)

   தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட யாரும் முன்வராததால் ராஜன் அவர்களின் தந்தையார் சுப்பிரமணியம் அவர்களுக்கு எதிராகப் போட்டியிட முன்வந்தார்.

   அப்போதைய அரசுச் சட்டப்படி அரசுப்பிணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால், G.P.S. மானேஜர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜன் அவர்களின் தந்தை.

   தேர்தலில் 127 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார் அவர். பின்னர் அரசியலே வாடிக்கையானது.

   உழைப்புக்காக பரந்தனில் குடியேறியவர்கள் அல்ல ராஜன் அவர்களின் குடும்பத்தினர். கட்சிக்காக, விடுதலைக்காக உழைப்பை இழந்தவர்கள் அவர்கள். கட்டுக்கதை எழுதியவர்களில் எத்தனை பேர் இதனை அறிவர்?

   அடுத்து, 1971ஆம் ஆண்டு இறுதியில் மாணவர் பேரவை திரு. சத்திய சீலன் அவர்கள் தலைமையில் செயற்பட ஆரம்பித்தது.

   கிளிநொச்சிப் பகுதியிலிருந்து மாணவர் பேரவையில் இணைந்தவர்கள் இருவர். ஒருவரது பெயர் திரு. மயில்வாகனம் பாலேந்திரன், மற்றவர் திரு. ராஜன் அவாகள். இவர்கள் இருவரும் பரந்தனைச் சேர்ந்தவர்கள்.

   சத்திய சீலன் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் மறைந்திருந்தது பரந்தனில்தான். வன்முறை மூலம் நாட்டை மீட்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியவர் பொன்னுத்துரை சத்திய சீலன் அவர்கள்தான். இவர் உரும்பராயைச் சேர்ந்தவர்.

   இவர் மாணவர் பேரவைத் தலைவராவதற்கு முன்னர் தலைவராக இருந்தவர் திரு. அரியரெத்தினம் அவர்கள் வன்முறையை விரும்பாததினால் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர்தான் சத்தியசீலன் அவர்கள் தலைவரானார்.

   திரு. சத்தியசீலன் அவர்கள்தான் தமிழீழ விடுதலைப் போரட்டத்தை ஆரம்பித்து வைத்தவர் என்பது பலராலும் இன்று மறைக்கப்பட்ட உண்மையாகும்.

   இவரை தலைவராகக் கொண்டுதான், திரு. சறிசபாரெத்தினம் அவர்கள், திரு. பிரபாகரன் அவர்கள், திரு. குட்டிமணி அவர்கள், திரு. வண்ணை ஆனந்தன் அவர்கள், திரு. சபாலிங்கம் அவர்கள் (பாரிசில் சுடப்பட்டவர்) மற்றும் திருவாளர் ராஜன் போன்றோர் 1971 – 1972 களில் செயற்பட்டனர்.

   மாணவர் பேரவைத் தலைவர் சத்தியசீலன் அவர்களின் உத்தரவின்படி பல வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. (அவற்றையெல்லாம் பின்நாளில் வரவிருக்கும் புத்தகத்தில் காணலாம்) அவற்றில் திரு. ராஜன் அவர்கள் கைது செய்யப்பட்டதைப் பற்றி மட்டும் இங்கே தருகிறோம்.

   1973ஆம் ஆண்டு அன்றைய தபால் அமைச்சர் திரு. குமாரசூரியர் அவர்கள் ஊர்காவல்துறைக்கு தபால் அலுவலகம் ஒன்றினை திறந்து வைப்பதற்காக வருகைதரவிருந்தார்.

   1972ஆம் ஆண்டு மே 22ந் திகதி இலங்கை சிங்களக் குடியரசாக ஆக்கப்பட்டது. அந்த அரசியல் மாற்றத்தை பதவிப் பிரியரான குமாரசூரியர் அவர்கள் ஆதரித்தார். (இப்போது திருவாளர் ஆனந்தசங்கரி மாதிரி)

   சத்தியசீலன் அவர்கள் குட்டிமணி அவர்களை அழைத்து அமைச்சர் குமாரசூரியரை மேலுலகம் அனுப்பிவைக்கும்படி பணித்தார்.

   1972ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணம் கரையூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் குமாரசூரியர் உரையாற்றுகிறார் என்ற செய்தி கிடைத்தது. குட்டிமணி அவர்களும் அவருடன் மேலும் இருவரும் சேர்ந்து கை எறிகுண்டுகள் தயாரித்துக்கொண்டு அமைச்சர் குமாரசூரியரது கூட்டத்துக்குச் சென்றனர்.

   இரவு 8 மணியளவில் அமைச்சர் குமாரசூரியர் பேசுவதற்காக எழுந்ததும் குட்டிமணி அவர்களும் அவருடன் வந்த ஒருவரும் இணைந்து இரு குண்டுகளை தபால் அமைச்சரது மேடை மீது வீசினர். அந்த இரு குண்டுகளும் அமைச்சர் குமாரசூரியர் அருகில் விழுந்து உருண்டு ஓடி மறுபுறத்தில் விழுந்தன. அவை வெடிக்கவே இல்லை.

   மேடையில் விழுந்தது குண்டுகள்தான் என்று மேடையில் இருந்தவர்களுக்குத் தெரிந்ததும் குண்டு வீசுகிறார்கள் என்று கூச்சல் போட்டனர். கூட்டம் கலைந்து நாலாபுறமும் மக்கள் ஓடி பெரும் ரகளையே ஏற்பட்டது. குட்டிமணியும் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று ஊர்போய்ச் சேர்ந்துவிட்டனர்.

   அடுத்த விஜயமாக ஊர்காவல்துறைக்கு வருகிறார் அமைச்சர் குமாரசூரியர். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று தீர்மானித்து யாழ் பண்ணைப்பாலம் அருகில் இருக்கும் சிறிய பாலம் ஒன்றினைத் தகர்த்து குமாரசூரியரைக் கொல்ல வேண்டும். இந்தப் பொறுப்பை ராஜன் அவர்களிடம் வழங்கினார் தலைவர் சத்தியசீலன்.

   1973ஆம் ஆண்டு ஜனவரி 16ந் திகதி அமைச்சர் குமாரசூரியர் ஊர்காவல்துறையில் தபால் அலுவலகத்தைத் திறந்து வைத்துவிட்டு மாலை 6:30 மணி முதல் ஏழு மணிக்குள் பண்ணைப்பாலத்தைக் கடக்கிறார் குமாரசூரியர்.

   இந்தப் பாலத்தைத் தகர்க்கவென்று 24 டைனமெற்கள். 12 ரோச் பற்றறிகள், 150 நீளம் கொண்ட வயர் இவைகள் வாங்கப்பட்டன. சாவகச்சேரியைச் சேர்ந்த திரு. திசைவீரசிங்கம் என்பவர் துணைக்கு நியமிக்கப்பட்டார்.

   சத்தியசீலன் அவர்களும் ராஜன் அவர்களும் பரந்தனிலிருந்து ஒரு காரில் புறப்பட்டு ஊர்க்காவற்துறை சென்று, பண்ணைப் பாலம் அருகில் இருக்கும் சிறிய பாலத்தைத் தெரிவுசெய்கின்றனர்.

   ஏனெனில் அந்தப் பாலம்தான் பழுதடைந்து உடையும் தருவாயிலிருந்தது. அடுத்து. தகர்த்ததும் தப்பிச் சென்று படகில் ஏறி கரையூரை வந்தடைய அதுதான் சரியான இடம் என்று தெரிவாகிவிட்டது.

   படகுக்காக ராஜன் அவர்கள் தனது நண்பர் ஒருவரை அனுகினார். அவரது பெயர் திரு. ஆசீர்வாதம் தாசன். தனது படகை ஓட்டி வருவதற்கு அவர் சம்மதித்தார்.

   குறித்த தினமான 'தை' 16-ந்திகதி பிற்பகல் 3 மணியளவில் கரையூரிலிருந்து படகில் மண்கும்பான் நோக்கிப் புறப்பட்டனர் மூவரும் 5:30 மணியளவில் மண்கும்பான் கடற்கரையில் இறங்கினர். படகைக் கரையில் கட்டிவிட்டு, நடக்க ஆரம்பித்தனர். ஏறக்குறைய இரண்டு கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றால் குறித்த பாலத்தை அடையலாம்.

   அமைச்சர் குமாரசூரியருக்கு வரும் வழியெல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மண்கும்பானிலும் பொலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. மூவரும் இதனைக் கவனித்து கிராமத்தின் வயல்வெளியில் இறங்கி நடந்து சென்றனர். அப்போது ஒரு கூட்டம் இவர்களை வழிமறித்தது. எங்கு செல்கிறீர்கள் என்று வினவியது. இவர்களும் எதிர்கேள்வி கேட்டனர்.

   கைகளில் இருந்த பார்சல்களைப் பார்க்கத்தான் வேண்டும் என்று அடம்பிடித்தனர் வந்தவர்கள். ராஜன் அவர்களின் கைகளில் டைனமெற், ஆசீர்வாதம் தாசன் அவர்களின் கைகளில் வயர் மற்றும் சுத்தியல் உளி போன்றவை. திசை வீரசிங்கம் அவர்களின் கைகளில் ஒரு பையில் ஒர றிவோல்வரும் வேறுசில பொருட்களும்.

   தகராறு முற்றியதும் மூவரும் சோந்து அந்த நபர்களைத் தாக்கினர். திசை வீரசிங்கம் அவர்கள் வைத்திருந்த பையை ஒரு நபர் பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். கைத்துப்பாக்கியைப் பறிகொடுத்த திசைவீரசிங்கம் அவர்கள் மிரண்டுபோய். நாம் திரும்பிவிடலாம். பிரச்சினை வரப்போகிறது என்று ராஜன் அவர்களிடம் கூறினார்.

   இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் குமாரசூரியர் தப்பிவிடுவார். எனவே, நீர் திரும்பிச் செல்வதென்றால் செல்லலாம் என்று கூறிவிட்டு தாசன் அவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு பாலத்தை நோக்கி நடக்கப் புறப்பட்டார் ராஜன் அவர்கள். திசை வீரசிங்கம் அவர்களும் வேறுவழியின்றி பின்தொடர்ந்து நடந்து செல்கையில் வலது மற்றும் இடது புறமாக பொலிசாரும் பொதுமக்களும் இவர்களை நோக்கி ஓடிவருவதைக் கண்டனர்.

   மாலை இருட்டிய நேரம் என்பதால் தப்பிவிடலாம் என்ற எண்ணத்தில் மூன்று பேரும் அங்கிருந்து ஓடத் தொடங்கினர். வேலிகளைத் தாண்டி பாய்ந்து ஓடும்பொழுது தாசன் அவர்கள் ஒரு வேலியில் மாட்டிக்கொண்டார். காய்ந்த பனை ஓலையினால் வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததால் அதன் நடுவில் முள்ளுக் கம்பிகள் இருந்தது அந்த மாலை வேலையில் தெரியவில்லை.

   நூறு மீற்றர் துரத்தைக் கடந்ததும் கூடவந்த தாசன் அவர்களைக் காணவில்லை. திசைவீரசிங்கம் அவர்களை ஓடும்படி கூறிவிட்டு மீண்டும் திரும்பி தாசனைத் தேடி ஓடிவந்தார் ராஜன் அவர்கள். தாசன் அவர்கள் ஓர் பனை ஓலை வேலியில் முள்ளுக்கம்பி குத்தியபடி தொங்கிக்கொண்டிருந்தார்.

   அருகில் பொலிசும். ஊர் மக்களும் சூழ்ந்து நின்றனர். ராஜன் அவர்களைக் கண்டதும் பொலிசார் துப்பாக்கியை நீட்டி கைகளை உயர்த்தும்படி சத்தமிட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். திசைவீரசிங்கம் அவர்கள் இருட்டில் தப்பிவிட்டார்.

   டைனமற். வயர். புற்றறி போன்றவை பிடிபட்டன. வயர்லெஸ் மூலம் பொலிசார் பல இடங்களுக்கும் தகவல்கள் தெரிவித்தனர். அங்கு நின்ற சிங்களப் பொலிசார் துப்பாக்கிப் பிடிகளால் இருவரையும் தாக்கினர்.

   பல பொலிஸ் வாகனங்கள் வந்தன. ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தக்கு இரவு 9 மணியளவில் இருவரையும் கொண்டு சென்றனர். தாசன் அவர்களைத் தேடி திரும்பி வரவில்லையென்றால் ராஜன் அவர்களும் தப்பியிருக்கலாம். தாசன் அவர்கள் பிடிபட்டதால்தான் ராஜன் அவர்களும் பிடிபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

   ஏனெனில் ராஜன் அவர்களின் வேண்டுதலின் பேரில்தான் தாசன் அவர்கள் இச்சம்பவத்துக்கு வந்தார். அவரை விட்டுவிட்டு தப்பிச் செல்வது மிகவும் மோசமான துரோகமாகும். தாசன் அவர்களைக் காப்பாற்றிச் செல்லவேண்டும் அல்லது அவருடன் சேர்ந்து பிடிபடவேண்டும். ராஜன் அவர்கள் சரியான முடிவெடுத்துச் செயற்பட்டார்.

   ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் தாக்கப்பட்டனர் இருவரும். குமாரசூரியரை கொல்லத்தானே வந்தீர்கள் என்று இருவரையும் கேட்டுத் தாக்கினர்.

   வாகனத்தில் ஏற்றும் போதே தாசனிடத்தில். ‘கள்ளக்கடத்தல் பொருட்கள் வருகின்றன ஏற்றிவந்தால் பணம் தருவதாக ராஜன் அவர்கள் அழைத்து வந்ததாக வாக்குமூலம் கொடுக்கும்படி’ ராஜன் அவர்கள் கூறிவிட்டார். தாசன் அவர்களும் அப்படியே ‘எனக்குத் தெரியாது கள்ளக்கடத்தல் சாமான்கள் ஏற்றத்தான் வந்தேன்’ என்று கூறிவிட்டார்.

   திசைவீரசிங்கம் அவர்கள் தப்பிச் சென்றது ஒரு வழியில் இருவருக்கும் உதவியாக இருந்தது. பரந்தனில் இருந்த ராஜன் அவர்களை திசை வீரசிங்கம் அவர்கள் கடத்தல் பொருட்கள் கொண்டு வருவதற்கென்று அழைத்துவந்ததாக வாக்குமூலம் கொடுக்க ஏதுவாக இருந்தது.

   ராஜன் அவர்களை இன்ஸ்பெக்ரர் கிருஸ்ணராசா, இன்ஸ்பெக்ரர் தாமோதரம் பிள்ளை சிவில் உடை சிங்கள அதிகாரி ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவாரமாக விசாரித்தனர். திசைவீரசிங்கம் அவர்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது என்று கூறிவிட்டார்.

   மொத்தம் 14 நாட்கள் விசாரணை நடத்தி எதுவும் பெறமுடியாத நிலையில் 30-01-1973 காலையில் யாழ்ப்பாணம் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி யாழ். சிறையினுள் ஜே.வி.பி. நபர்கள் பகுதியில் அடைக்கப்பட்டனர் இருவரும்.

   எட்டு மாதங்கள் கழித்து யாழ். சிறையிலிருந்து கண்டி போகம்பறைச் சிறைக்கு மாற்றப்பட்டனர் இருவரும்.

   குமாரசூரியர் அன்று தப்பித்ததற்கு காரணம், மண்கும்பான் பகுதியில் 15-01-1973 பொங்கல் அன்று அதாவது, இவர்கள் மூவரும் அந்தக் கடற்கரையில் இறங்குவதற்கு முன் தினம் இரவு அப்பகுதியில் ஓர் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

   இந்தச் சம்பவம் தெரியாததனால் மூவரும் அதே பகுதிக்கு படகில் சென்று இறங்கியுள்ளனர். பொலிசைக் கண்டுவிட்டு வயல்வெளியில் நடக்கப்புறப்பட்டதும் அந்த ஊர் மக்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. எனவேதான் கைகளில் உள்ள பைகளைப் பார்க்க வேண்டும் என்று முயற்சித்துள்ளனர். இதுவே, பிரச்சினையில் போய் முடிந்தது.

   திசைவீரசிங்கம் அவர்களிடம் இருந்து பையை பறித்துச் சென்றவர்கள் மண்கும்பான் சந்தியில் குமாரசூரியருக்குக் காவலுக்கு நின்ற பொலிசாரிடம் ஒப்படைத்துவிட்டனர். துப்பாக்கியைக் கண்டதும் பொலிஸ் உசாரடைந்துவிட்டது.

   இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ராஜன் அவர்கள் 1976ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ம் திகதிதான் விடுதலை செய்யப்பட்டார்.

   1972ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் இப்போதும் அதே கொள்கையுடன் போராட்டத்தில் இருக்கின்றனர் என்பது இந்தக் கட்டுக்கதை எழுதிய நபர்களுக்குத் தெரியுமா?

   கள்ள மரங்களை விற்பது இவருக்குத் தொழிலாகும் என்று அம்புலிமாமாக் கதை சொல்கின்றனர் கோவணக் குமாரதுரையும். புளொட் நரி பிரதீபனும்!

   (02) புளொட் இயக்கத்துக்கு பணம் தேவை, கிளிநொச்சி வங்கி பறிமுதலுக்கு கூலிக்கு சாரதி வேலை செய்த ராஜன் என்று எழுதியுள்ளனர். புளொட் உமா மகேஸ்வரன் அவர்களைப் பற்றி சிறிய விளக்கத்தினை இங்கே தருகிறோம்.

   1979ஆம் ஆண்டு கேணல் கொப்பேகடுவ தலைமையில் யாழ்ப்பாணம் இளைஞர்கள் சுடப்பட்டனர். திரு. இன்பம், திரு. பாலேந்திரன் மற்றும் மேலும் மூன்று இளைஞர்கள் கொப்பேகடுவினால் சுடப்பட்டு யாழ்ப்பாண வீதிகளில் வீசப்பட்டனர். 13-06-1979 அன்று இந்தச் சம்பவம் நடந்தது.

   இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழ் இளைஞர்களுக்கு பெரும் பயத்தினை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து திரு. பிரபாகரன், திரு. உமா மகேஸ்வரன், திரு. சந்ததியார், திருவாளர். ஐயர் என்று அன்றைய நாளிலிருந்த வீரர்கள் அனைவரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.

   திரு. உமாமகேஸ்வரன் அவர்கள் 1976ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் கடைசிப் பகுதியில்தான் விடுதலை இயக்கத்தில் இணைந்தார். அதன் முன்னர் தமிழர் ஐக்கிய முன்னணியின் கொழும்புக் கிளைச் செயலாளராகத்தான் அவர் செயற்ப்டு வந்தார்.

   1976ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் புலிகள் இயக்கத்தில் இணைந்தார் உமா மகேஸ்வரன் அவர்கள். ஏனைய தமிழ் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கிய ஐந்து ஆண்டுகளின் பின்னர்தான் திரு. உமா அவர்களின் வரவு நிகழ்ந்தது.

   1979ஆம் ஆண்டு கொப்பேகடுவவின் பயங்கரவாதச் செயலால் சென்னை சென்றவர்கள் 1980ஆம் ஆண்டு உள்முரண்பாடு காரணமாக பிரிந்தனர்.

   4.5 றிவோல்வருடன் தப்பிய உமா மகேஸ்வரன் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு திரு. பிரபாகரன் அவர்கள் பெரும் முயற்சி எடுத்து வந்தார். உமா மகேஸ்வரன் அவர்களுடன் சென்னையில் ஒரு நபர்களும் இருக்கவில்லை.

   சென்னையிலிருந்து திரும்பி வவுனியாவுக்கு வந்த திரு. சந்ததியார் (வசந்தன்)அவர்கள் ராஜன் அவர்களைச் சந்தித்து இனிமேல் பிரபாகரன் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது. நீங்கள் இந்தியா சென்று உமா மகேஸ்வரன் அவர்களை அழைத்து வாருங்கள், நாம் ஒன்று சேர்ந்து இயங்குவோம்.

   நீங்கள் நேரில் சென்று கதைத்தால்தான் அவர் வருவார். அவருக்கென்று இங்கு வேறு நம்பிக்கையானவர்கள் கிடையாது. நீங்கள் சம்மதித்தால் உங்களை நம்பி வருவார். கிளிநொச்சி, வவுனியாவில் உங்களது வேலைத் திட்டங்கள் பற்றி அவர் நிறையவே அறிந்திருக்கிறார். எனவே நீங்கள் சென்று அழைத்து வாருங்கள் என்று சந்ததியார் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் ராஜன் அவர்கள் 03-06-1980 அன்று தலைமன்னாரிலிருந்து கப்பல் மூலம் இந்தியா சென்றடைந்தார்.

   09-06-1980 அன்று தமிழ் நாட்டு சட்டசபை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டிருந்தது. கலைஞர் கருணாநிதி அவர்கள் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்தத் தேர்தல் முடிவில் எம்.ஜி.ஆர் அவர்கள் வெற்றிபெற்றார். தேர்தலுக்கான பிரச்சாரமும், கொண்டாட்டமும,; குதுகலமும் அதிகமாக இருந்தபடியால் தேர்தலுக்கு முன்பே, 06-06-1980 வெள்ளைக்கிழமை அன்று உமாமகேஸ்வரன் அவர்களைச் சந்திக்க ராஜன்அவர்கள் மண்ணடிக்குச் சென்றார்.

   பிரபாகரன் அவர்களுக்குப் பயந்து உமா அவர்கள் தனது பெயரை லோகநாதன் என்று மாற்றிக் கொண்டு மண்ணடியில் இருந்த ஓர் பகல் நேர உணவு விடுதியில் தங்கியிருந்தார். ராஜன் அவர்கள் அவரை தேடிச் சென்ற பொழுது அவர் அங்கு இல்லை.

   ஓர் துண்டுச் சீட்டில் ராஜன் அவர்கள் தங்கியிருந்த முகவரியான புரசைவாக்கம் பவர் மென்சன் அறை எண்ணைக் குறிப்பிட்டு, வந்து சந்திக்கும் படி உணவு விடுதி உரிமையாளரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அன்று மாலை ஆறு மணிக்கு உமா அவர்கள் ராஜன் அவர்களின் அறை கதவைத் தட்டினார்.

   ராஜன் அவர்களுடன் சற்குணதாஸ் என்ற மலேசிய நண்பர் ஒருவர் இருந்ததால் பூந்தமல்லி சாலையிலிருக்கும் நேரு பூங்காவிற்கு உமாஅவர்களை அழைத்து வந்து கதைத்தார். அன்று வெள்ளிக்கிழமையாதலால் தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியைக் காண பூங்காவில் கூட்டம் அதிகமாக இருந்தது. பூங்காவில் கூட்டம் அதிகம் இல்லாத தெற்கு மூலையில் அமர்ந்து கதைக்கவேண்டியதாயிருந்தது.

   ராஜன் அவர்கள் தலைமன்னாரிலிருந்து புறப்பட்ட அன்றுதான் சகோ. ஊர்மிலா அவர்கள் வவுனியா சாந்தி மருத்துவமனையில் இறந்தார். சகோ. ஊர்மிலா அவர்கள் இறந்தது தொடர்பாக சென்னையிலிருந்து திரு. மணவைத் தம்பியின் பெயரில் அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு தந்தி ஒன்று கொடுக்கப்பட்டது.

   அதில், “பிரபாகரன்தான் ஊர்மிலாவை சதி செய்து கொன்றார் என்றும் அதனை விசாரிக்க வேண்டும்” என்றும் சொல்லப்பட்டிருந்தது.

   உமா அவர்களை நேரு பூங்காவில் சந்தித்த ராஜன் அவர்கள் முதலில் கேட்ட கேள்வி, “எதற்காக ஜெயவர்த்தனாவுக்கு தந்தி கொடுத்தீர்கள்” என்பதாகும். அதற்கு பதிலிளித்த உமா அவர்கள், “நான் கொடுக்க வில்லை மணவைத் தம்பிதான் எனக்குத் தெரியாமல் கொடுத்துவிட்டார். எனக்குத் தெரிந்திருந்தால்; விட்டிருக்கமாட்டேன்” என்றார்.

   இயக்கப் பிரச்சினைகள் எங்களுடன் இருக்க வேண்டும். எங்கள் பிரச்சினைகளை சிங்கள அரசாங்கம் தீர்த்துவைக்குமென்றால், நாங்கள் போராடவேண்டிய தேவையே இருக்காதே, என்று ராஜன் அவர்கள் கூறியதற்கு, மணவைத் தம்பி அவசரப்பட்டுவிட்டார் என்று உமா அவர்கள் சொல்ல, அன்று அந்தக் கூற்று ஏற்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்துதான் தெரிந்தது அந்தத் தந்தியை திரு. மணவைத் தம்பி பெயரில் கொடுத்தது உமாமகேஸ்வரன் அவர்கள்தான் என்று.

   வவுனியா, கிளிநொச்சி பகுதிகளில் பண்ணைகள், முகாம்கள், கூட்டுறவுக் கடைகள் பற்றிய செயற்பாடுகளை எல்லாம் கேட்டறிந்துவிட்டு, ராஜன் அவர்களுடன் இலங்கைத் திரும்ப சம்மதித்தார் உமா அவர்கள். ஆனால் அவர் கடவுச்சீட்டில் வரமுடியாது. படகு வழியாகத்தான் வரவேண்டும்.

   பிரபாகரன் அவர்களுக்குத் தெரியாமல்தான் மாதகல் வழியாக வரவேண்டும் எனவே, அதற்கான ஏற்பாடு செய்துமுடித்துவிட்டு தகவல் தருவதாகவும் மறுநாள், பிற்பகலில் அண்ணா யூனிவர்சிற்றி கன்ரீனில் சந்திப்பது என்று முடிவாகிப் புறப்படும் வேளையில், எந்த வாகணத்தில் வந்தீர்கள் என்று ராஜன் அவர்கள் உமா அவர்களிடம் வினவினார். அதற்கு உமா அவர்கள், “நான் நடந்து வந்தேன்” என்றார். எங்கேயிருந்து என்றதற்கு மண்ணடியிலிருந்து என்றார். கையில் காசு இல்லையா? என்றதற்கு, இல்லையென்று தலையசைத்தார் உமா அவர்கள். மதியம் சாப்பிட்டீர்களா என்றதற்கும் இல்லையென்று சொன்னார். மண்ணடியிலிருந்து புரசைவாக்கம் ஏறக்குறைய 5கி.மீற்றர் தூரம் வரும். அந்தத் தூரத்தை நடந்து கடந்த கழைப்பு அவரது முகத்தில் தெரிந்தது.

   உடனே ராஜன் அவர்கள் தனது சட்டைப் பையிலிருந்த இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்து நேரு பூங்கா எதிரிலிருந்த உணவு விடுதியில் உணவு அருந்தும்ப கூறி அழைத்துச் சென்றார். அப்போது, “நீங்கள் தங்கியிருப்பது பகல் நேர உணவு விடுதியில்தானே” என்று ராஜன் அவர்கள் கேட்டதற்கு, நான் அங்கு தங்குவதில்லை. தொடர்புக்கான முகவரிதான் அது. தினமும் வந்து பார்த்துவிட்டுச் செல்வேன். நாலுபேர் வந்து போகும் இடம். பிரபாகரன் யாரையாவது சாப்பாட்டுக்கு அனுப்புவது போல் அனுப்பி எதுவும் செய்துவிடலாம் என்றார்.

   ராஜன் அவர்கள் தங்கியிருந்த பவர் மென்சனை அன்று பார்த்துவிட்டுப் போன உமா அவர்கள்தான் பவர் மென்சனில் நிரந்தர அறை எடுத்துத் தங்கினார். பிற்காலத்தில் வந்து சேர்ந்த உறுப்பினர்களும் இந்த பவர் மென்சனில்தான் மறைந்து வாசம் செய்தனர்.

   அண்ணா யூனிவர் சிற்றியில் சந்தித்த உமா அவர்கள் புரட்டாசி மாதத்தில் யாழ்ப்பாணம் வந்து சேர்வது என்று முடிவெடுத்து தெரிவித்ததைத் தொடர்ந்து ராஜன் அவர்கள் வவுனியா சென்றார்.

   தொடரும்.

Back